×

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து விழுப்புரம் வரை சைக்கிளில் 2 மகன்களை 200 கிமீ அழைத்து சென்ற தொழிலாளி: பெரம்பலூரில் உணவு வழங்கி அனுப்பி வைப்பு

பெரம்பலூர்: ஊரடங்கு எதிரொலியாக அக்கா வீட்டில் தங்கியிருந்த 2 மகன்களை அழைத்து கொண்டு தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து, விழுப்புரம் மாவட்டம் வரை 200 கிமீ தூரத்திற்கு சைக்கிளில் பயணம் செய்த கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு பெரம்பலூரில் சமூக ஆர்வலர்கள் உணவு வழங்கி வழியனுப்பினர். விழுப்புரம் மாவட்டம் சிறு மதுரை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி(39). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மகன்கள் சபரேஷன்(11), யுவராஜ்(9). இருவரும் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தங்கமணியின் அக்கா வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தனது மகன்களை ஊருக்கு அழைத்து வர தங்கமணி முடிவு செய்தார்.

பஸ் வசதி இல்லாததால் சிறுமதுரை கிராமத்திலிருந்து சைக்கிளிலேயே 200கிமீ பயணம் செய்து புறப்பட்டு திருக்காட்டுப்பள்ளி சென்றார். பின்னர் 2 மகன்களையும் முக கவசங்களுடன் பாதுகாப்பாக சைக்கிளில் ஏற்றி கொண்டு நேற்று அதிகாலை மீண்டும் சிறுமதுரைக்கு புறப்பட்டார். திருக்காட்டு பள்ளியிலிருந்து பூண்டி, அரியூர், அன்பில், லால்குடி, புள்ளம்பாடி, பாடாலூர் வழியாக பெரம்பலூர் வந்த அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாலாஜி தேவேந்திரன், கமல்முத்துக்குமார் ஆகியோர் உணவு வழங்கி வழியனுப்பி வைத்தனர். நேற்று இரவு 8 மணியளவில் தங்கமணி தனது 2 மகன்களுடன் சொந்த ஊருக்கு சென்றடைந்தார்.

Tags : sons ,Perambalur ,Villupuram ,Tirukkattupalli , Tirukkattupalli, Villupuram, Worker
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...