×

2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் ஓடும்: பேட்டரி மூலம் பைக்கை பயன்படுத்தும் சிதம்பரம் நகராட்சி பணியாளர்

சிதம்பரம்: நாளுக்கு நாள் பெருகி வரும் பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கே கணிசமான தொகையை ஒதுக்க வேண்டி உள்ளது. இதனால் சமீப காலங்களாக பேட்டரி வாகனங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. பெட்ரோல் செலவு மிச்சம் என்பதால் இந்த வகை பைக்குகள் வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த சூழ்நிலையில்தான் நகராட்சி பணியாளர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோலுக்கு பதிலாக  பேட்டரிகளை பொருத்தி அதில் பைக் இயங்கும் வகையில் வடிவமைத்து அசத்தி இருக்கிறார்.

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் பணியாளராக பணியாற்றி வருபவர் சிவசுப்பிரமணியன்(35). சிதம்பரம் அருகே உள்ள கந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த இவர் தனது பைக்கில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பேட்டரிகளை தானே பொருத்தியுள்ளார். இதன் மூலம் தனது இருசக்கர வாகனம் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார். ஒரு முறை சுமார் 2 மணி நேரம் ரீசார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் வரை இந்த வாகனத்தை இயக்கலாம் என கூறினார். மணிக்கு அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த வாகனத்தில் செல்லலாம் எனவும்,

ஒருமுறை செலவு செய்து பேட்டரி மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்ததால் இனி தனது வாகனத்திற்கு பெட்ரோல் செலவு இல்லை என கூறிய சிவசுப்பிரமணியன், பைக்கிற்கு சார்ஜ் ஏற்றுவதற்கு தினசரி அரை யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகிறது எனவும், இதற்கு செலவு வெறும் ரூ.5 மட்டுமே என கூறினார்.

Tags : Chidambaram , Battery Bike, Chidambaram, Municipal Employee
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்