×

நலவாரியம் மூலம் நிவாரணம் வாங்கி தருவதாக 300 வசூலித்தவர்களுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்

சேலம்: சேலம் நெய்க்காரப்பட்டி அருகே மலங்காடு பகுதியில், கடந்த  சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர் நல வாரியத்தில் கொரோனா உதவி தொகை, ரேஷன் ெபாருட்கள் வாங்கி தருவதாக கூறி அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க நிர்வாகிகள், அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர், அவர்கள் சந்தாவாக சிலரிடம் 300 வசூல் செய்துள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு,  நல வாரியத்தில் நிவாரணம் வாங்கி தருவதாக கூறி வசூல் ெசய்தவர்களை சுற்றிவளைத்து, எதற்காக பணம் வசூல் செய்கிறீர்கள் என கேட்டனர். பின்னர், கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொய் சொல்லி  வசூல் செய்தவதாக கூறி, பணம் வசூலித்தவர்களை பொதுமக்கள் தாக்கினர்.  

உடனே  பணம் வசூலித்தவர்கள், தாங்கள் ஆளும் கட்சி பிரமுகருடன் சேர்ந்து இருந்த போட்டோவை காட்டியுள்ளனர். ஆனால், அதை ஏற்காத பொதுமக்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி கொண்டனர். பின்னர், அவர்களை கொண்டலாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நலசங்கத்தின் மாநில நிர்வாகிகள் என்பதும், அவர்கள் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த தொழிலாளர்களின் பதிவை புதுப்பிக்க 300 வசூல் செய்ததும் தெரிந்தது. இருப்பினும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் அனுமதி இல்லாமல் ஊருக்குள் செல்ல கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Tags : charity , Welfare, relief, charity
× RELATED தீ தொண்டு நாள் வார விழா