×

யெஸ் வங்கி ஊழல் வழக்கு சிபிஐ காவலில் டிஎச்எப்எல் நிறுவன இயக்குனர்கள்

புதுடெல்லி: யெஸ் வங்கி ஊழல் வழக்கில் டிஎச்எப்எல். இயக்குனர்கள் கபில் வாதவான், தீரஜ் வாதவான் ஆகியோரை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. யெஸ் வங்கி 2018ம் ஆண்டு டிஎச்எப்எல். நிறுவனத்துக்கு ₹3,700 கோடி கடன்  வழங்கியது. அதேபோல, தீரஜ் வாதவான் இயக்குனராக உள்ள ஆர்கேடபிள்யூ.  டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு ₹750 கோடி கடன் வழங்கியது. இதற்கு ரூ.600 ேகாடி வரையில் முதலீடாக லஞ்சம் கைமாறியுள்ளதாக சிபிஐ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 7ம் தேதி முதல் அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம் பாஞ்ச்கானி நோக்கி குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த வாதவான் குடும்பத்தினரை சதாரா போலீசார் கைது செய்தனர். அவர்களை சிபிஐ நேற்று தன் காவலில் எடுத்துக் கொண்டது.

Tags : company directors ,DHFL ,CBI ,Yes Bank ,Yes , DHFL company, directors , CBI custody in case, Yes Bank scam
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...