×

ஆபாச இணையதளம் மீது காது கேளாத வாலிபர் வழக்கு சப்டைட்டில் போடாம நான் எப்படி ‘அதை’ ரசிக்கிறது?: இப்படியும் ஒரு கவலை

நியூயார்க்: வீடியோவில் சப்டைட்டில் போடாததால் என்னால் காட்சிகளை ரசிக்க முடியவில்லை என்று ஆபாச 2 இணையதளங்கள் மீது காது கேளாத வாலிபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில் மாற்றுத்திறனாளிகள் சட்டம் அமலில் உள்ளது. அதாவது பொது வீடியோ காட்சிகளில் காது கேளாதவர்களும் ரசிக்கும் வகையில், சப்டைட்டில் போட வேண்டும். அதேபோல், பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு ஒலி வடிவிலான விளக்கம் தேவை.
நியூயார்க் நகரைச் சேர்ந்த வாலிபர் யாரோஸ்லாவ் சுரிஸ். இவர் புரூக்ளின் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். இரண்டு ஆபாச இணையதளங்களின் பெயரை குறிப்பிட்டு, ‘‘அதில் வரும் காட்சிகளை என்னால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. இதற்கு காரணம், அந்த ஆபாசக் காட்சிகளில் அவர்கள் என்ன பேசுகிறார்கள்(?) என்பது சப்டைட்டிலில் போடப்படவில்லை. இதனால், நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். இவர்கள் மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை மீறியுள்ளார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

சுரிஸ் ஏற்கனவே இதே காரணத்துக்காக, ‘பாக்ஸ் நியூஸ்’ என்ற செய்தி நிறுவனத்தின் மீதும் இதேபோல் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆபாச இணையதளங்கள் மீது சுரிஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட இணையதளங்களின் நிர்வாகிகள் ஆஜராகி, ‘‘சப்டைட்டிலை பார்க்க வேண்டும் என்றால், அதற்கு தனியாக இணைப்பு அடையாளத்தை தந்துள்ளோம். ஆனால், அதை கிளிக் செய்யாமலேயே வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால்தான் அவரால் சப்டைட்டிலை பார்க்க முடியவில்லை’’ என்றனர். இதுகுறித்து சுரிஸூக்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். வடிவேலு பாணியில் சொல்வதென்றால், ‘‘ஸ்ஸ்ஸ்..... அப்பா.... முடியலடா சாமீ....’’ என்கிறீர்களா?

Tags : Deaf Plaintiff , use ,don't , Deaf Plaintiff , porn website?
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...