×

வடகொரிய அதிபர் கிம் உடல்நிலை சர்ச்சையை உருவாக்கும் ரயில் படம்

சியோல்: வடகொரிய அதிபருக்கு சொந்தமான ரயில் நிற்பது தொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படத்தின் மூலமாக கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் வெளிவந்தவாறு உள்ளது. கடந்த 10ம் தேதி கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது  உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் வெளியே வராததால் அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் அங்குள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் அதிபருக்கு சொந்தமான இடத்தில் கடந்த வாரம்  முதல் கிம் ஜாங் உன் பயன்படுத்தும் பிரத்யேக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  ‘38 நார்த்’ என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் தனது சாட்டிலைட் மூலமாக எடுக்கப்பட்ட இந்த படத்தை வெளியிட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பி உள்ளது. ஆனால் கிம் உடல் நிலை குறித்த தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதனிடையே கிம் தலைநகர் சியோலுக்கு வெளியே தங்கி இருப்பதாக தென்கொரிய உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபருக்கு சொந்தமான வோன்சன் வளாகத்தில் கடந்த 21ம் தேதி முதல் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக ‘38 நார்த்’ நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 15ம் தேதி இங்கு அதிபரின் ரயில் நிறுத்தப்படவில்லை என்றும் கடந்த 21 மற்றும் 23ம் தேதி ரயில் இங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிம் உடல் நிலை மோசமடைந்தாலோ அல்லது எதிர்பாரதவிதமாக இறக்க நேரிட்டாலே வடகொரியா அசாதாரண சூழலை உடனடியாக எதிர்கொள்ளாது என தென் கொரியா வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிபர் கிம்மின் சகோதரி கிம் யூ ஜாங் போன்ற ஒருவர் உடனடியாக அந்த இடத்தை நிரப்புவதற்கு வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


Tags : Kim ,North Korean , North Korean President, Kim, train , creates a health dispute
× RELATED போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை