×

காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 1200 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி: திமுக எம்எல்ஏ, எம்பி வழங்கினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, செவிலிமேடு 49வது வார்டில் உள்ள 1200க்கும் மேற்பட்ட  குடும்பங்களுக்கு ₹6 லட்சம் மதிப்பில் தலா 10 கிலோ அரிசி  பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் செவிலிமேடுமோகன் தலைமை தாங்கினார். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் கம்பெனிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. தினசரி வேலைக்கு சென்று வந்த தொழிலாளர்கள்  வாழ்வாதாரம் இழந்த சூழலில்  தற்போது  வீட்டிலே  முடங்கி இருக்கின்றனர்.

அவர்களுக்கு உதவும் விதமாக காஞ்சிபுரம் பெருநகராட்சி செவிலிமேடு 49வது வார்டில் உள்ள 1200 குடும்பங்களுக்கு ₹6 லட்சம் மதிப்பில்  தலா 10 கிலோ அரிசியை  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏவுமான, க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்பி சிறுவேடல் ஜி.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன்  ஆகியோர்  வழங்கினர். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர செயலாளர் சன் பிரான்ட் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் குமணன்,  சந்துரு, ஜெகன், கருணாநிதி,  எம்.எஸ். சுகுமார், தசரதன், எஸ்கேபி சீனிவாசன், கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : DMK MLA ,families ,MLA ,DMK , DMK MLA, MP gives 10 kg ,rice ,1200 families
× RELATED முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள...