×

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளைச் சாவு... மரணம்... எது சரி?.. சர்வதேச ஊடங்கள் பரபரப்பு செய்தி

பியாங்கியாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்திருக்கலாம், மூளைச் சாவு அடைந்திருக்கலாம் இல்லாவிட்டால் அவர் உடல்நிலை முன்னேற்றமடைந்து நன்றாக இருக்கலாம் என்று பல செய்திகள்கள் பரவி வருகின்றன. அணு ஆயுத சோதனை, ஏவுகணை ஏவுதல்களை கடும் எதிர்ப்புகளை மீறி செய்து வந்தமையால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பால் ராக்கெட் மேன் என அழைக்கப்பட்டவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். இவர், மூளைச் சாவு அடைந்துவிட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் வடகொரியா ஊடகங்களோ அங்கு நிலை சீராக இருப்பதாகவே செயல்படுகின்றன. கிம்மிற்கு கைகள் மோசமாக நடுங்கியதால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது அவர் இறந்துவிட்டதாக பெய்ஜிங்கின் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரங்கள் உறுதியற்ற தகவல்களை தெரிவித்துள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் அவரது நாட்டு மக்களை சந்திக்க சென்றபோது நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழுந்ததாக ஜப்பான் நாட்டு பத்திரிகைக்கு சீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிம்முடன் இருந்த மருத்துவர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார். ஒருவேளை கிம் இறந்திருந்தால் வடகொரிய ஊடகங்கள் தெரிவித்தால் மட்டுமே அது அதிகாரப்பூர்வமானதாக கருத முடியும். தற்போது, கிம் ஜாங் உன் இறந்திருக்கலாம், மூளைச் சாவு அடைந்திருக்கலாம்  இல்லாவிட்டால் அவர் உடல்நிலை முன்னேற்றமடைந்து நன்றாக இருக்கலாம் என்று பல  செய்திகள்கள் பரவி வருகின்றன. கிம்மின் தந்தை, தாத்தா ஆகியோரின் இறப்புகளை 4 நாட்கள் கழித்தே அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kim Jong Un ,death ,Kim Jong Jong ,North Korean , கிம் ஜாங் உன், மூளைச் சாவு, சர்வதேச ஊடங்கள்,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...