×

கிராமங்களில் நோய் தடுப்பு நடவடிக்கை இல்லை: ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமபுற பகுதிகளில் கொரோனா தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான கோவில்பட்டி, கரட்டுப்பட்டி, முத்தனம்பட்டி, ரெங்கசமூத்திரம், ரெங்கநாதபுரம், டி.சுப்புலாபுரம், அணைக்கரைபட்டி, மூணாண்டிபட்டி, புள்ளிமான் கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தொற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கிராம பகுதிகளிலும், சாலையின் ஓரத்திலும் பிளீச்சிங் பவுடர்கள் தெளிக்கவில்லை.

குறிப்பாக, வீடுகளில் கிருமி நாசினி மற்றும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தாமல் இருக்கிறது. கிராமங்களின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே கழிவுநீர் குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது. மேலும் கிராமங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் உள்ளதால், தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,‘‘ ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி பிறகு எங்களது கிராமத்திற்கு எந்த ஒரு விழிப்புணர்வும், பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி போன்ற நோய் தடுப்பு நடவடிக்கை மேற்க்கொள்ளப்படவில்லை. முக்கியமாக, ஆண்டிபட்டி கிராமபுற பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாதது பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்,’’என்றனர்.

Tags : villages ,Panchayat , Immunization, panchayat administration, negligence
× RELATED தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு...