×

களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளுக்கு கொரோனா தடுக்க சிறப்புக்குழு அமைப்பு

களக்காடு: களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் 894 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, கடமான், செந்நாய் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவைகள் அடிக்கடி மலையடிவார பகுதிகளில் புகுவது வழக்கம். தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, வனவிலங்குகளுக்கு பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் இளங்கோ மேற்பார்வையில் வன சரகர்கள் புகழேந்தி, பாலாஜி உள்பட 8 வனத்துறை ஊழியர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தினமும் பகல், இரவு நேரங்களில் சுழற்சி முறையில் மலையடிவார பகுதிகளில் ரோந்து சென்று வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

அம்பை கோட்டத்தில் துணை இயக்குநர் கணேசன் ஆலோசனையின் பேரில் கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம், பாபநாசம் வனச்சர்கர் பரத், வனக்கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் தலைமையில் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் வனச்சரகப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குழுவினர் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் ரோந்துப் பணியில் ஈடுபடுவது, வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளிவராமல் தடுப்பது, வனவெளி மண்டலப் பகுதியான மலையடிவாரப் பகுதி, கிராமப்பகுதிகளில் விலங்குகளுக்கு நோய்கள், வாழ்வியல் மாற்றங்கள், மனிதர்களால் ஏற்படும் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.
வனவெளி மண்டலப் பகுதியில் விலங்குகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து வனத்துறையினருக்கு 82481 51116, 98658 75955, 04634-283165, 04634-250594 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் 894 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, கடமான், செந்நாய் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


Tags : KALAKKADU ,committee ,Mundanthurai Tiger Reserve ,KALAKKADU - Mundanthurai ,Tiger Reserve , KALAKKADU,special committee ,wildlife,Mundanthurai Tiger Reserve
× RELATED காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல்...