×

குடியிருப்பு பகுதிகளில் டெய்லர், சிறுகடைகளை திறக்க அனுமதி: நிபந்தனைகளுடன் உள்துறை உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறிய கடைகள் நிபந்தனைகளுடன் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள்:
* அந்தந்த மாநிலத்தின் கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள, நகராட்சிக்கு உட்பட்ட மற்றும் நகராட்சிக்கு வெளியே உள்ள தையல் கடைகள், சிறிய கடைகள் ஆகியவற்றை திறந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
* நகர்ப்புறங்களில் குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள தனிக் கடைகள்
* குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள்
* கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து கடைகள்
* குடியிருப்பு வளாகங்களில் தனியாக அமைந்துள்ள தையல் கடைகள்
* நகராட்சி, நகராட்சிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட சந்தையில் உள்ள கடைகள் சமூக விலகலைப் பின்பற்றி முகமூடி அணிந்த, 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்
* நகர்ப்புறத்திலோ அல்லது தனியாகவோ அமைந்துள்ள கடையாக இருக்கும் பட்சத்தில், அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் கடைகளும் கூட செயல்படலாம்
* நகராட்சி மற்றும் நகராட்சிகளின் எல்லைக்குள் வரும் வணிக வளாகங்களை தவிர பிற கடைகள் திறக்கலாம்
திறக்க அனுமதி இல்லாதவை
* மால்களும் சினிமா தியேட்டர்கள்
* அதிகளவிலான கடைகளைக் கொண்ட வணிக வளாகங்கள்
* நகராட்சி நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளின் எல்லைக்கு வெளியே பல பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்களில் உள்ள கடைகள் புதிய உத்தரவால் விலக்கு அளிக்கப்படவில்லை
* ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மார்கெட் பகுதியில் உள்ள காம்ப்ளக்ஸ்களில் உள்ள கடைகள், தனிப்பட்ட அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பிராண்டுகளின் கடைகள் உள்ள காம்ப்ளக்ஸ்
* மால்களுக்குள் அமைந்துள்ள பிரத்யேக ஷோரூம்கள்
* மதுபான கடைகள்
தமிழக அரசு இன்று முதல் வரும் 29ம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் அந்த பகுதிகளில் இந்த தளர்வு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய வழிகாட்டுதல்கள் மிகவும் பாதிக்கப்பட்ட அல்லது கட்டுப்பாட்டில் உள்ள மண்டலங்களுக்கு பொருந்தாது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த  மார்ச் 24 முதல் கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அரசின் இந்த முடிவு  மக்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.



Tags : openings ,areas ,Taylor , Residential areas, taylor, pantry, interior
× RELATED திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு