×

சில்லி பாயிண்ட்…

* இந்தியா  ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடர் ரத்தானால் ஆஸி. கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் 1400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு விசா கட்டுப்பாடுகளை தளர்த்தும் என எதிர்பார்க்கபடுகிறது.
* டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்யும் வகையில், கூடுதலாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
* வெஸ்ட் இண்டீஸ் அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தொடர் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போ (39 வயது), சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
* சச்சினின் 100 சர்வதேச சதம், 200 டெஸ்ட் போட்டியில் விளையாடியது உள்ளிட்ட முக்கிய சாதனைகளை எந்த ஒரு வீரராவது முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று ஆஸி. முன்னாள் வேகம் பிரெட் லீ கூறியுள்ளார்.
* ஆஸி. அணி முன்னாள் ஆல் ரவுண்டர் கிரீம் வாட்சன் (75 வயது) நேற்று காலமானார். இயான் சேப்பல் உட்பட ஆஸி. பிரபலங்கள் பலரும் கிரீம் வாட்சனின் மறைக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
* பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சனா மிர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அவர் 2005ல் இருந்து 2019 வரை பாகிஸ்தான் அணிக்காக 226 போட்டிகளில் விளையாடி உள்ளதுடன் 137 போட்டிகளில் தலைமை வகித்துள்ளார்.

Tags : Tokyo Olympic Competition , Tokyo Olympic Competition
× RELATED சில்லி பாயின்ட்…