×

நெல்லை மாவட்ட நெல்லிக்காய்களை அதிகம் வாங்கும் கேரள வியாபாரிகள்: கிலோ 40 வரை விற்பனை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லிக்காய்களுக்கான தனி மவுசு காரணமாக கேரள வியாபாரிகள் அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர். மருத்துவக் குணம் நிறைந்த நெல்லிக்காய்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. தென்காசி, நெல்லை மாவட்டங்களில் தென்காசி, செங்கோட்டை,  வீரவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு மலையடிவார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நெல்லிக்கனிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக பெய்த பருவமழையால் நெல்லை மாவட்டம் இட்டேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாமரைச்செல்வி பகுதியில் சுமார் 5 ஏக்கரில் விவசாயிகள் நெல்லிக்காய் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது நெல்லி மரங்கள் செழிப்பாக வளர்ந்து நெல்லி காய்த்து குலுங்குகிறது. உள்ளூரில் நெல்லிக்காய் கிலோ ரூ.20க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். இதனை பறித்து மூடைகளில் கட்டி வாகனங்களில் ஏற்றிச்செல்ல அதிக செலவாகிறது. இதனால் உள்ளூரில் குறைவாக நெல்லி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் கிலோ ரூ.30 முதல் 40 வரை கொள்முதல் செய்கின்றனர். இதன் காரணமாக நெல்லிக்காயை கேரள வியாபாரிகளுக்கு விற்பனைக்கு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 இதுகுறித்து விவசாயி முத்து கூறுகையில், ‘‘இட்டேரி பஞ்சாயத்து தாமரைச்செல்வி பகுதியில்  செங்கோட்டை, குற்றாலம் பகுதிகளில் இருந்து வாங்கி வரப்பட்ட நெல்லிக்கன்றுகள்  நடப்பட்டன. சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ்  மூலம் 2 ஆயிரம் நெல்லிகளுக்கு பாய்ச்சப்பட்டு வருகிறது. பொதுவாக நடப்படும் நெல்லி மரக்கன்றுகளில் 3 ஆண்டுகளிலேயே காய்ப்பு தொடங்கி விடும். இதற்கு தேவையான அளவுக்கு  தண்ணீர் பாய்ச்சி, சாணி உரம் இட்டால் மரங்கள் செழித்து வளர்ந்து காய்ப்பு பலனை உறுதியாக தந்துவிடும்’’ என்றார்.  கேரள வியாபாரிகள், இங்கேயே நேரடியாக வந்து நெல்லிக்காய்களை கொள்முதல்  செய்வதால் செலவு மிச்சமாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : traders ,Kerala ,Paddy , Paddy District, Gooseberry, Kerala Merchants
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...