×

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்யக்கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்துள்ளனர். இதனால் 21 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு நிதி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக அவர்களுக்குரிய அகவிலைப்படியைப் பிடித்தம் செய்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பிரதமருக்கான புதிய வீடு கட்டும் ‘‘சென்ட்ரல் விஸ்டா’’ திட்டத்துக்கு 20,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

புல்லட் ரயில் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதை நிறுத்தி வைத்து பயன்படுத்தினாலே ஏழை, எளிய மக்களுக்கு தாராளமாக நிதி உதவி செய்ய முடியும். எனவே, இந்த முடிவை ரத்து செய்து மத்திய அரசு ஊழியர்களுக்குச் சேர வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எதிரான இத்தகைய முயற்சிகளை மோடி அரசு கைவிட வேண்டும்.

Tags : government ,hike ,Thirumavalavan , Federal government employees, DA, Thirumavalvan
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை