×

பாதுகாப்பான முறைப்படி நல்லடக்கம் செய்த பின் வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பு இல்லை: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டபின் மீண்டும் வெளியில் எடுத்து வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என சுகாதாரத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளதால், ஆனந்தி சைமன் கோரிக்கையை ஏற்பது  சாத்தியம் இல்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் (55) என்பவர், நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள தனியார்  மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, 7ம் தேதி கெரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சிறப்பான தொடர் சிகிச்சைக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி 19ம் தேதி இயற்கை எய்தினார்.

இதையடுத்து அண்ணாநகர் மண்டல அலுவலர் ஆலோசனையின் பேரில் மரணமடைந்த மருத்துவரின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் அமைந்துள்ள வேலங்காடு மயான பூமியில் நல்லடக்கம் மரணமடைந்த மருத்துவரின் உடல் முழு மரியாதையுடனும், மத சடங்குகளின்படியும் கொரோனா நோய் தொற்று பாதித்து மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கான சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படியும் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆனந்தி சைமன் நல்லடக்கம் செய்யப்பட்ட தனது கணவரின் உடலை மீண்டும் எடுத்து கீழ்ப்பாக்கம் சிமெட்ரிஸ் போர்டு கல்லறையில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சியிடம் கடந்த 22ம் தேதி அன்று வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை கோரப்பட்டது.  அவ்வறிக்கையின் படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டபின் மீண்டும் வெளியில் எடுத்து வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என  தெரிவித்துள்ளதால், ஆனந்தி சைமன் கோரிக்கையை ஏற்பது  சாத்தியம் இல்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Burial , Burying ,safe place ,good order , safe, Municipal notice
× RELATED வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க...