×

வாஷிங்டனில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திய ரூ.9 லட்சம் கஞ்சா பறிமுதல்

சென்னை: வாஷிங்டனில் இருந்து பார்சலில் சென்னைக்கு கடத்திய ₹9 லட்சம் மதிப்புடைய போதைப்பொருள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து இந்தியாவில் பயணிகள் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது சரக்கு விமான போக்குவரத்து மட்டுமே நடக்கிறது. அதிலும் வெளிநாடுகளிலிருந்து பெருமளவு கொரோனா வைரசுக்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு சரக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பார்சல்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தபோது,

அமெரிக்காவின் வாஷிங்டனிலிருந்து ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னவரம் என்ற ஊரில் உள்ள ஒருவருக்கு 8 பார்சல்கள் வந்திருந்தன. அந்த பார்சல்களில் சுத்தப்படுத்த பயன்படுத்தும் வேக்கம் கிளீனர்கள் மற்றும் தூங்குவதற்கு பயன்படுத்தும் டெண்ட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிகாரிகளுக்கு அந்த பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அதை பிரித்து பார்த்தனர். அதில் டெண்ட்கள், வேக்கம் கிளீனர்களுக்கிடையே உயர் ரக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.  அதில் மொத்தம் 1.7 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ₹9 லட்சம்.
அதிகாரிகள் விசாரணையில், பார்சலில் இருந்த முகவரி போலி என்று தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Andhra Pradesh ,Washington , Rs 9 lakh ,smuggled, Washington , Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி