×

விவசாயிகளுக்கு ரூ.0 ஆயிரம் வழங்ககோரி வீடுகளில் கருப்பு கொடி

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஏராளமான சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பழங்கள், பூக்கள், வாழை உட்பட பல்வேறு வகையான விளை பொருட்கள் அழித்துள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் நட்டமடைந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்தரவு படி சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ₹10 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது,

பூ, பழங்கள் உட்பட பல வேளாண் பொருட்கள் அழிந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்திட வேண்டும், ஏழை குடும்பங்கள் அனைவருக்கும் ₹5 ஆயிரம் வழங்க வேண்டும், கொரோனா நோய் பாதித்துள்ள மாவட்டத்தில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி தங்கள் இல்லங்களில் இருந்தவாறே எதிர்ப்பை தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.துளசிநாராயணன் மற்றும் குடும்பத்தாருடன் கருப்பு கொடி ஏந்தி, கருப்பு உடையணிந்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.  


Tags : houses , Black flag , farmers' houses , Rs
× RELATED சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்கு...