×

வடகொரிய அதிபர் கிம் ஜாங் மூளைச்சாவு?: மருத்துவ நிபுணர்களை அனுப்பி வைத்தது சீனா

பியாங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடமாக இருப்பதால், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சீனா மருத்துவ நிபுணர்களை அனுப்பி வைத்துள்ளது. வடகொரியா அதிபர் கிம்  ஜாங் உன். சீனாவை தவிர எந்த நாட்டையும் மதிக்காதவர். அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஏவுகணை சோதனைகளை சர்வசாதாரணமாக செய்தவர். இதனால் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டபோதும், அதைப்பற்றி கவலைப்படாமல் தன் போக்கில் செயல்பட்டு வந்தார். கிம்  ஜாங் உன் மிக மோசமான அதிபர். தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றுவிடுவது அவரது வழக்கம். இந்த வகையில் அரசியல் எதிராளிகள் முதல் ராணுவத்தில் உயரதிகாரிகள் வரையில் யாரையுமே அவர் விட்டுவைக்கவில்லை. சொந்த காதலியை கூட சுட்டுக் கொன்றுள்ளார்.
இப்படி ஆட்சி அதிகாரத்துடன் வலம் வந்துக் கொண்டிருந்த கிம்  ஜாங் உன்னுக்கு கடந்த 10ம் தேதி இதய பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 பின்பு அவருக்காகவே சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டது. அங்கு வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவெல்லாம் பொய் என்று அண்டை நாடான தென் கொரியாவும், வடகொரியாவுடன் சமீபத்தில் பேச்சு நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கூறி வருகின்றனர். இந்நிலையில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் தன்னுடைய நண்பனான வடகொரிய அதிபர் கிம்  ஜாங் உன்னை காப்பாற்றுவதற்காக சிறப்பு மருத்துவ நிபுணர்களை வடகொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் இருந்தே, கிம்  ஜாங் உன் கவலைக்கிடமாக இருப்பது ஊர்ஜிதமாகி உள்ளது. மேலும், கிம்  ஜாங் உன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் விரைவில் அவரது மரணம் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆட்சிக்கு வரப்போவது சகோதரியா? மனைவியா?
கிம் ஜாங் உன் இறந்தால், ஆட்சியை கைப்பற்ற அவரது சகோதரி கிம் யோ முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இவரும் கொடூர குணம் படைத்தவர் என்று கூறப்படுகிறது. இவர் நவீன ஆயுதங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்று அவரைப்பற்றி அறிந்தவர்கள் கூறியுள்ளனர். கிம் ஜாங் உன்னை விட வடகொரியாவை கடுமையான நாடாக இவர் மாற்றுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.கிம் யோ கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றவர். இவர் சமீபகாலமாக கிம் ஜாங் உன்னின் பணிகளில் உதவி வந்தார். அதேசமயம், கிம் யோவை ஆட்சிக்கு வரவிடாமல், கிம் ஜாங் உன்னின் மனைவி ரிசோால் ஜூ ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags : Kim Jong ,North Korean ,professionals ,China , North Korean President ,Kim Jong brain, China dispatches ,medical professionals
× RELATED போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை