×

ஆன்லைன் விசாரணையில் வக்கீல் பனியனுடன் ஆஜரானதால் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வீடியோ கான்பரன்ஸ் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் பனியன் அணிந்து இருந்ததால் கோபமடைந்த நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே  ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அவசர மனுக்கள் மட்டும் ஆன்லைனில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் லால்ராம் என்பவருக்கு ஜாமீன் பெறுவதற்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடந்தது. இதில் லால்ராமுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ரவீந்திரகுமார் பாலிவால் ஆஜராகி வந்தார். இந்த வழக்கு நேற்று வீடியோ கான்பரன்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதத்தை கேட்க, நீதிபதி சஞ்சீ–்வ் பிரகாஷ் தயாராக இருந்தார்.

வீடியோவில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரகுமார்  பனியனுடன் இருந்தார். வழக்கறிஞருக்குரிய ஆடையை அணியாமல் ரவீந்திரகுமார் பனியன் அணிந்து இருந்ததால் நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் வழக்கை டிஸ்மிஸ் செய்வதற்கு நீதிபதி விரும்பினார். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்டவரை தண்டித்ததை போன்று ஆகிவிடும் என்பதால், முடிவை பரிசீலிக்க வேண்டுகோள் விடுத்ததை அடுத்து வழக்கு விசாரணையை மே 5ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த மாத தொடக்கத்தில் வீடியோ கான்பரன்சிங் விசாரணையின்போது இதே போன்ற சம்பவம் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணையில் வழக்கறிஞர்கள் தங்களுக்குரிய சீருடையுடன் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : judge ,Buniyan ,hearing , judge adjourned,appeared,lawyer Buniyan ,online hearing
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...