×

சர்வதேச மனித உரிமைக்கு எதிரான கசையடி தண்டனை சவுதியில் ஒழிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரியாத்: சவுதி அரேபியாவில் பிரபலமான கசையடி தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கள்ள உறவு ைவத்திருப்பவர்கள், திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு கசையடி உள்ளிட்டவை தண்டனையாக வழங்கப்படுவது வழக்கம். இந்த தண்டனைக்கு பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த சமூக நல ஆர்வலர் ராய்ப் பதாவி என்பவருக்கு அந்நாட்டு அரசு 10 ஆண்டு சிறை தண்டனையும், 1000 கசையடிகளையும் கடந்த 2014ம் ஆண்டு வழங்கியது.

இவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் சிறந்த மனித உரிமையாளர் விருதை பெற்றிருந்தார். சவுதி அரேபியா அரசின் தண்டனை முறைக்கு எதிராக போராடிய அரசியல் உரிமை கூட்டமைப்பு உறுப்பினரான அப்துல்லா அல் ஹமீது மரணம் அடைந்த சில நாட்களே ஆன நிலையில் கசையடி ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.சர்வதேச மனித உரிமை குழுவினர் இந்த தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சவுதி அரேபியா உச்ச நீதிமன்றம் கசையடி தண்டனையை ஒழித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மேலும் கூறுகையில், `‘சர்வதேச மனித உரிமைவிதிகளுக்கு எதிரானதாக கசையடி தண்டனை இருப்பதால் அந்த தண்டனை ஒழிக்கப்படுகிறது. இனிமேல் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பது, சிறை தண்டனை, அல்லது பொது சேவை செய்தல் போன்றவற்றையே தண்டனையாக நீதிபதிகள் வழங்கவேண்டும்’’ என தெரிவித்துள்ளது.

Tags : abolition ,Supreme Court ,Saudi , Saudi abolition ,international human rights,scandal, Supreme Court ,orders
× RELATED உள்ளாட்சி தேர்தல் விவகாரம் திமுகவின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு