×

இந்திய அமெரிக்கர் ஆன்லைன் பிரசாரம் கம்யூனிச சீனாவை தடுத்து நிறுத்துவோம்

வாஷிங்டன்: ‘‘கொரோனா வைரஸ் குறித்த பொய்க்கு சீன கம்யூனிஸ்ட் அரசு பொறுப்பேற்க வேண்டும்’’ என இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வலியுறுத்தி உள்ளார். சீனாவில் தான் கொரோனா நோய் தொற்று முதல் முதலில் பரவத் தொடங்கியது. தற்போது சீனாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் சீனாவை காட்டிலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று குறித்த உண்மையான தகவல்களை சீனா வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வம்சவாளி அமெரிக்கரும், குடியரசு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவருமான நிக்கி ஹாலே கூறுகையில், ‘‘கொரோனா நோய் தொற்று தொடர்பாக பொய் கூறியதற்கு சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார். மேலும், “சீனாவின் கம்யூனிஸ்ட் அரசியலை தடுத்து நிறுத்துவோம்” என்ற கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆன்லைனில்  நேற்று முன்தினம் இரவு நிக்கி ஹாலேவின் மனுவில் இதுவரை 40,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.


Tags : american ,Indian ,China , Indian american, online publicity , stop communist China
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...