×

அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பொதுமக்கள் உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பொதுமக்கள் உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாநகர் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 12 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அறிக்கை அளித்தது. அதன்ேபரில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில் இன்று முதல் 29ம் தேதி வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் 29ம் தேதி வரையும் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கை மக்கள் உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், ‘கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, பல இடங்களில் (ஏப். 26ம் தேதி) இன்று தொடங்கி, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அரசு முடிவெடுத்துள்ளது. இதனை அனைவரும் உறுதியுடன் கடைபிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : public ,government ,Mughal , public,firmly adhere,full curfew announced , government:
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...