×

சீர்காழியில் ஊரடங்கை மீறுவோரை கண்காணித்த ட்ரோன் மீது கல் எறிந்து தாக்க முயன்ற இளைஞர்கள்: எச்சரித்து அனுப்பிய போலீஸ்

சீர்காழி: சீர்காழியில் ஊரடங்கை மீறுவோரை கண்காணித்த ட்ரோன் கேமராவை கல்லால் தாக்க முயற்சித்த இளைஞர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இதில் சீர்காழி நகர் பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான எடமணல், திருமுல்லைவாசல் உள்ளிட கடற்கரையோர பகுதிகளிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்.

அப்போது, சில இடங்களில் கூட்டமாக கிரிக்கெட் மற்றும் கபடி விளையாடிய இளைஞர்கள் ட்ரோன் கேமரா சத்தத்தைக் கேட்டு தலைதெறிக்க ஓடி ஒளிந்தனர். வயல்வெளியில் கிரிக்கெட் விளையாடிய சில இளைஞர்கள், ட்ரோன் கேமராவை கல்லால் அடித்து தாக்க முயற்சித்தனர். அப்போது சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்ஐ., ராஜா ஆகியோர் இளைஞர்களை பிடித்து இது போன்ற செயல் தொடர்ந்தால் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

Tags : men ,Sirkazhi ,curfew violators , Disorientation, drone, youth
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...