×

கொரோனா எதிரொலி: மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து...பக்தர்கள் ஏமாற்றம்

மதுரை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருகின்ற மே 7-ம் தேதி நடைபெற இருந்த கள்ளழகர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், மதுரையில் இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சித்திரை மாதம் மதுரையில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருவது வழக்கம்.

இது சித்திரை திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழா கொடியேற்றம், பட்டாபிஷேகம், திக்விஜயம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் வைகையில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகளாக நடைபெறும். முதல் 15 நாட்கள் தேரோட்டம், மீனாட்சி திருக்கல்யாணம் ஆகியவை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும். அடுத்த 15 நாட்களில் அழகர் கோயிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளுவார். பின்னர் எதிர் சேவை, பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டதன் காரணமாக திருவிழா நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது.

அதன்படி, மே மூன்றாம் தேதி திட்டமிடப்பட்டிருந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், உலகப்புகழ் பெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் ரத்தாகியுள்ளது பக்தர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது. எனினும், மண்டூக மக ரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் கோவில் பட்டாச்சாரியார்களால் கோவில் உட்பிரகாரத்தில் உரிய பாதுகாப்புகளுடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona Echo ,Madurai ,devotees ,The Madurai River Landing Show , Corona, Madurai, Kallazhagar, Vaigai, canceled, devotees
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...