×

குடியாத்தம் அம்மா உணவகத்தில் முகக்கவசம் அணிந்தபடி சாப்பிடுவதுபோல் போஸ்கொடுத்த எம்எல்ஏ: அதிமுகவினர் அதிர்ச்சி

குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செதுகரை பகுதியில் நகராட்சி 36 வார்டுகளை சேர்ந்த அதிமுகவினருக்கு தலா 5 கிலோ அரிசி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது, சமூக இடைவெளி கடை பிடிக்காமல் அதிமுகவினர் திரண்டனர். இதில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் நிவாரண பொருட்களை வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வரிசையில் நின்றதை பார்த்த அமைச்சரும் அதை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து, குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அதிமுக சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டது.

இதில் அம்மா உணவகத்தில் தயார் செய்திருந்த உணவை ருசி பார்ப்பதுபோல் அமைச்சர் கே.சி.வீரமணி, நகராட்சி ஆணையாளர் ரமேஷ் உள்ளிட்டோர் புகைப்படம் எடுப்பதற்காக போஸ் கொடுத்தனர். கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன் முகக்கவசம் அணிந்து கொண்டு, உணவு சாப்பிடுவதுபோல் போஸ் கொடுத்தார். பின்னர் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை அங்கேயே வைத்து விட்டு சென்றனர். இதைப்பார்த்து அங்கிருந்த அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


Tags : MLA ,restaurant , Settlement, mother meal, face mask, MLA
× RELATED பொது இட ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட...