×

சிவகிரி அருகே தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்: மா, தென்னை மரங்கள் சேதம்

சிவகிரி: சிவகிரி அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டுயானைகள் மா, தென்னை மரங்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, சொக்கம்பட்டி, கடையநல்லூர், வடகரை, செங்கோட்டை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ள நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து மா, வாழை, தென்னை, பனைமரங்களை வேருடன் பிடுங்கி சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர், இரை தேடி காட்டு யானைகள் மலையடிவாரத்திலுள்ள விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் உழைப்பும் மூலதனமும் செலுத்தி விளைவித்த பொருட்கள் கைகூடாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

சிவகிரி அருகே உள்ளாறு கிராமத்திற்கு மேற்கே முத்தையாபாண்டியன் என்பவருக்கு தோப்பில் மா, எலுமிச்சை, தென்னை போன்ற மரங்கள் வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் புகுந்து மா, தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. மாங்காய்களை பறித்தும், தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்தும் சின்னாபின்னமாக்கி உள்ளன. எனவே விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் காட்டு யானை கூட்டங்களை வனத்துறையினர் தடுத்து விரட்டி தங்களின் வேதனையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Sivagiri , Shivagiri, Wild Elephants, Attakasam
× RELATED குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது