×

மோப்ப நாய் பிரிவு எஸ்ஐ அறையில் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை: பணிச்சுமை காரணமா? மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரையில் உள்ள மோப்பநாய் பிரிவு அலுவலகத்தில் எஸ்ஐ அறையில், ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.   மதுரை, விஸ்வநாதபுரம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்தவர் விஜயகுமார்(45). இவர் மதுரை காவல்துறையின் மோப்ப நாய் பிரிவில், ஏட்டாக பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் சொந்த ஊரான சிலைமானில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நத்தம் சாலையில் உள்ள மோப்ப நாய் பிரிவு அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார். அலுவலகத்தில் இவர் ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார்.

நேற்று காலை சக ஊழியர்கள், அலுவலகத்துக்கு வந்தபோது, எஸ்ஐயின் அலுவலக அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், ஏட்டு விஜயகுமார் இறந்து கிடந்தார். தகவலறிந்து தல்லாகுளம் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Madurai , Mop Dog Group SI
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...