×

போய் வேலைய பாருய்யா.... மோடி கைத்தட்ட சொன்னா கொரோனா போய்டுமா? பாஜ எம்எல்ஏ பேச்சால் தலைமை அதிர்ச்சி

லக்னோ: பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய பாஜவை சேர்ந்த எம்எல்ஏ.விடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  உத்தரப் பிரதேச மாநிலம், சீதாப்பூர் தொகுதியைச் சேர்ந்த பாஜ எம்எல்ஏ ராகேஷ் ரத்தோரி. நேற்று முன்தினம் ரத்தோரி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த ஆடியோவில், பாஜ எம்எல்ஏ ரத்தோரி, உள்ளூரைச் சேர்ந்த பாஜ தலைவர் ஜே.பி.சாகு என்பவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில், ‘‘பிரதமர் மோடி மக்களை கைகளை தட்ட சொல்வதும், மணி அடிக்க சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்றாகும். கைகளை தட்டுவதன் மூலமாக கொரோனாவை விரட்டி விட முடியுமா? உங்களை போன்றவர்கள் முட்டாள்கள்.

கைகளை தட்டினால் கொரோனா அகன்று விடுமா?’’ என கூறியுள்ளார். பாஜ எம்எல்ஏவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.  இந்த ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏவுக்கு பாஜ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பாக ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து எம்எல்ஏ ராகேஷ் எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

Tags : Modi ,speech ,Baja MLA , Modi, Corona, BJP MLA
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...