மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகளை திறக்க கூடாது

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவை நடைமுறைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

 முழு ஊரடங்கு நாட்களின்போது மளிகை கடைகள், இறைச்சி கடைகள், பேக்கரிகள் போன்றவை ஞாயிற்றுக்கிழமை முதல் புதன் கிழமை வரை திறக்க கூடாது. இதை கண்காணிக்க சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் கடைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என இக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories:

>