×

சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினர் மீதான தடுப்பூசி சோதனைக்கு பாகிஸ்தான் பலிகடா?... இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்லாமாபாத்: சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினர் மீதான தடுப்பூசி சோதனைக்கு பாகிஸ்தானை சேர்ந்தவரை பரிசோதிக்க, பாகிஸ்தான் பிரதமர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா  வைரசின் பிறப்பிடமான வூஹானில் மார்ச் 16ம் தேதி முதல் தடுப்பூசி கண்டறிவதில் சீனா தீவிரமாக இறங்கி உள்ளது. இதன் முடிவு ஏப்ரல் மாதத்தில்  அறிவிக்கப்படும். இந்த தடுப்பூசி சீனாவை தளமாகக் கொண்ட வெளிநாட்டினருக்கும் பரிசோதிக்கப்படும் என்று சீன ராணுவ அறிவியல் அகாடமியின்  ஆராய்ச்சியாளர் சென் தெரிவித்துள்ளார். சீனாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு சோதிப்பதில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் பலிகடாவாக மாறப்போகிறாரா? என்ற கேள்வி இப்போது பலரின் மனதில் எழுந்துள்ளது.

இதற்காக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம், இந்த தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிய சீனா முயற்சிக்கும். இதுகுறித்து, பாகிஸ்தான் செய்தி சேனல் 92-ல் பாகிஸ்தானின் தேசிய சுகாதார நிறுவனத்தின் பொது மருத்துவர் அமீர் இக்ரம் கூறுகையில், ‘தடுப்பூசி பரிசோதனைக்கான பணிகளை சீனா தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த மூன்று மாதங்களில் பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிக்க முயற்சிக்கின்றன. ஆனால் சீனா இதை கண்டுபிடித்துள்ளது. வழக்கமாக ஒரு தடுப்பூசி தயாரிக்க 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும். சீனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய தடுப்பூசி பல நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளை மிக விரைவில் சரிசெய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில், கொரோனா வைரஸ் நோயாளிகள் மீது சீனா தனது சொந்த மருத்துவ பரிசோதனையை பாகிஸ்தானில் நடத்தப் போகிறது. எந்தவொரு தடுப்பூசியையும் மனிதர்களுக்கு பரிசோதனை செய்யும் போது, அதில் பெரிய ஆபத்து உள்ளது. நோயாளியின் உயிரையும் இழக்க நேரிடும். அல்லது நோய் அதிகமாக பரவக்கூடும். இத்தனை ஆபத்துகள் இருந்தபோதிலும், சீனாவின் நட்பால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனாவின் இந்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Tags : Pakistan ,foreigners ,China , China, Vaccine Trial, Pakistan
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்