×

பல நாடுகள் திருப்பி அனுப்பிய நிலையில் சீனாவிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கருவி வாங்கியது ஏன்?... மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: பல நாடுகள் சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட துரித சோதனை  கருவிகளின் தரத்தை தெரிந்துகொண்டு திருப்பி அனுப்பிய நிலையில் அதே நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது  ஏன் என்று தெரியவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சீனாவிடமிருந்து இந்தியா ரேபிட் டெஸ்ட் கருவிகளை கொள்முதல் செய்ததைப் போல ஓரிரு மாதங்களுக்கு முன்பே ஸ்பெயின் நாடு 6 லட்சம் கருவிகளையும், செக்கோஸ்லோவாக்கியா 3 லட்சம் கருவிகளையும், பிரிட்டன் அரசு 1 லட்சம் கருவிகளையும் கொள்முதல் செய்தது. ஆனால் அவை நோயாளிகளின் சோதனைக்கு தகுதியற்றவை என்று அறிந்த பிறகு சீனாவுக்கே திருப்பி அனுப்பிவிட்டன.

அதற்காக ஏற்கனவே செலுத்திய பணத்தையும் அந்தந்த அரசுகள் திரும்ப பெற்றுக்கொண்டன. இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் பரவலாக வெளிவந்தன. இதை இந்திய அரசு அறியாதது வினோதமாக இருக்கிறது. உலகத்தின் பல நாடுகள் சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட துரித சோதனை கருவிகளின் தரத்தை தெரிந்துகொண்டு திருப்பி அனுப்பியதை அறியாமல் அதே நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன் என்று தெரியவில்லை.  இந்த கருவிகளை கொள்முதல் செய்வதற்கு  இந்திய சுகாதாரத்துறை பொறுப்பா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொறுப்பா? என்பது புரியாத புதிராக உள்ளது. இதற்கான விளக்கத்தை நாட்டுமக்களுக்கு வழங்கவேண்டிய பெரும் பொறுப்பு பிரதமர் மோடிக்கும், சுகாதாரத்துறைக்கும் இருக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : countries ,China ,Central Government , China, Rapid Test Equipment, Central Government, KSAlagiri
× RELATED நாடாளுமன்ற தேர்தல் களத்தில்...