×

அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினர் வீட்டு வாடகை செலுத்தவில்லை; பணத்தை வசூலிக்க ‘செக்ஸ்’ வாடகை திட்டம்: கடுப்பான அட்டர்னி ஜெனரல் வக்கீல்களுக்கு அவசர கடிதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத வாடகை செலுத்த முடியாத நிலையில், பணத்தை வசூலிக்க வீட்டு உரிமையாளர்கள் சிலர் ‘செக்ஸ்’ வாடகை திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல், வக்கீல்களுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார்.
உலகிலேயே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இன்றைய நிலையில், 8.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,845 பேர் இறந்துள்ளனர். கொத்து கொத்தமாக மரணங்கள் நடக்கும் நிலையில், அந்நாடு பெரும் பொருளாதார ெநருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் சாதாரணமான வாழ்க்கையை வாழும் குடும்பங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளன. குறிப்பாக வாடகை வீட்டில் வசிப்போர் கடுமையான பொருளாதார பாதிப்பில் தள்ளப்பட்டுள்ளனர். வீடு அல்லது நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது வாடகையை வசூலிக்க சம்பந்தப்பட்ட வீட்டில் வசிக்கும் பெண்களிடம் ‘செக்ஸ் வாடகை திட்டம்’ என்ற முறையை கையாண்டு வருகின்றனர்.

அதில் சம்மதப்பட்டு செல்லும் பெண்கள் மட்டுமே, ெதாடர்ந்து வாடகை வீட்டில் வசிக்க முடியும். அந்த பெண்களை ெபரும் பணபலம் படைத்தவர்களுக்கு ‘சப்ளை’ செய்யும் வேலையிலும் வீட்டின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இதனை ‘பாலியல் கடத்தல்’ என்று கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இதன் எதிரொலியாக, ‘செக்ஸ்’ வாடகை திட்டங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமெரிக்க வழக்கறிஞர்களுக்கு நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞரான, அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், ‘வீட்டு வாடகைக்கு இணையாக, குடியிருப்பில் வசிக்கும் பெண்ணை பாலியலுக்கு அழைக்கும் நடத்தை வெறுக்கத்தக்கது. சட்டவிரோதமானது; பொறுத்துக்கொள்ள முடியாது.

அதுவும் இந்த நேரத்தில் நிச்சயமாக பொறுத்துக்கொள்ள முடியாது. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஹவாய் மாநில ஆணையம் அளித்த பரிந்துரை அடிப்படையில், நீதித்துறை இதுபோன்ற சம்பவங்களை ஆராய்ந்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்துள்ளன. கொரோனா பரவலை குறைக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதால், அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் இம்மாத தொடக்கத்தில் தங்கள் ஏப்ரல் வாடகையை செலுத்த முடியவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலைகேட்டு, தொழிலாளர் துறையில் விண்ணப்பித்துள்ளனர்.

பல வீட்டு உரிமையாளர்கள் இந்த சூழ்நிலை புரிதலுடனும், வீட்டில் வசிப்போருக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, வீட்டுவசதி தொடர்பான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகார்கள் வந்தால், அந்த வழக்குகளை உடனடியாக எடுத்து நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். எவ்வித காலதாமதமும் செய்யக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் நீதித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளது என்பதை மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Americans ,lawyers ,Attorney General , USA, Home Rentals, Sex Rental Program
× RELATED வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட...