×

காய்கறி வியாபாரிகளுக்கு முக கவசம்

கூடுவாஞ்சேரி: கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 144 தடை அமலில் உள்ளது. இதற்கிடையில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்வதற்கு, தற்காலிக சந்தைகள் திறக்கப்பட்டன. அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதைதொடர்ந்து, கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காய்கறி, பழக்கடைகள் செயல்படுகின்றன. பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, துப்புரவு மேற்பார்வையாளர் சீனிவாசன், குடிநீர் பராமரிப்பு பணி அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் காய்கறி சந்தைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் முக கவசம் இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு, முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்வதால், உங்களால் பொதுமக்களுக்கும், பொதுமக்களால் உங்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. முறையாக முக கவசம் அணிய வேண்டும் என எச்சரித்தனர். பின்னர் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு முககவசம் வழங்கினர்.

Tags : vegetable dealers , Vegetable merchants, face shield
× RELATED தமிழக அரசு கொண்டு வந்துள்ள தடை...