×

மே தினத்தன்று அவரவர் இருப்பிடத்தில் கண்டனத்தை தெரிவித்து உரிமை மறுப்பு நாளாக அனுசரிக்க வேண்டும்: தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் கோரிக்கை

சென்னை:  தொ.மு.ச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி  வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் தாக்குதல் அதிர்ச்சியை விட மிகப் பெரிய அதிர்ச்சியாக மோடி அரசு தன்னிச்சையாக 8 மணி நேர பணியை 12 மணி நேரமாக ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை மத்திய தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன. இதனால் பா.ஜ.வின் கொத்தடிமை ஆட்சி நடைபெறும்  குஜராத் மாநிலத்தில்  தன்னிச்சையாக ஐ.எல்.ஓ. தீர்மானத்திற்கு எதிராக 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்கி சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது தொழிலாளர்களின் மத்தியில் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மோடி, உழைப்பவர்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக 12 மணி நேர வேலையை அறிவித்திருப்பது, அதுவும் தனது சொந்த மாநிலத்தில் அறிவித்து மற்ற ஆளுகின்ற கொத்தடிமைகளையெல்லாம் 12 மணி நேரமாக ஆக்கச் செய்து நாட்டை மீண்டும் அடிமை வாணிபத்திற்கு கொண்டு செல்கின்ற நாளாக இந்த மேநாள் உதயமாகிறது. மகிழ்ச்சியோடு கொண்டாடக் கூடிய மே நாள், மோடியின் நடவடிக்கை பொறுக்காமல் கொரோனா வைரஸ் எனும் கொடிய அரக்கனால் மக்கள் அவதிப்படுவது போதாது என்று கொண்டு வரும் சட்டத் திருத்தத்தாலும் இனி வருங்காலங்களில் உழைப்பவர்களின் உரிமைகள் பறிக்கப்படும் நாளாக நாம் கருதுகிறோம். எனவே மேநாளை உரிமை மற்கும் நாளாக அனுசரிப்பதே தொ.மு.ச. பேரவையின் லட்சக்கணக்கான உறுப்பினர்களுடைய கண்டனக் குரலாக எழுகிறது. எனவே மே நாள் அவரவர் இருப்பிடத்தில் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து உரிமை மறுப்பு நாளாக அனுசரிக்க வேண்டும்.

Tags : Shanmugam ,General Secretary ,location , Denial of Rights Day, General Secretary Shanmugam
× RELATED சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்:...