×

ஊரடங்கு நேரத்தில் அதிதி பாலனின் ஆல்பம்

சென்னை: அருவி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி பாலன். தற்போது மலையாளத்தில் நிவின் பாலி, மஞ்சு வாரியர் நடிக்கும் படவெட்டு என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், ஃப்ளாஸ் என்ற இசை ஆல்பம் வெளியிட்டுள்ளார். 16 எம்எம் மற்றும் 35 எம்எம் பிலிம் கேமராக்களால் படமாக்கப்பட்ட இப்பாடலை, தாராள பிரபு பட இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். சூரரைப்போற்று பட ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்பாடல் குறித்து அதிதி பாலன் கூறியதாவது: கிருஷ்ணா எனக்கு போன் செய்து, பிலிம் கேமரா டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்க முடியுமா என்று கேட்டார்.

கேமரா முன் நின்று பல நாட்களாகி விட்டது. அதுவும் பிலிம் கேமரா முன் நிற்பது இதுவே முதல்முறை. எனவே, கண்டிப்பாக எனக்கு இதுபோன்ற பரிசோதனை தேவைப்பட்டது. அதிக ஆர்வத்துடன் பங்கேற்றேன். இது வெளியாகும் என்று நினைக்கவில்லை. தேசிய ஊரடங்கு நேரத்தில் இதை வெளியிடுவது சரியாக இருக்கும் என்று தோன்றியது. இது வேடிக்கையான ஷூட்டாக மட்டுமே இருக்கும் என்று நினைத்தேன். படமாக்கும்போது அவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்தேன். என்றாலும், அதைவிட அவர்களிடம் மகிழ்ச்சி அதிகமாக இருந்தது என்றார்.

Tags : Aditi Balan ,curfew , Aditi Balan, album, curfew
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்