×

திருமணம் பற்றி வதந்தி அமலாபால் கோபம்

சென்னை: காதலருடன் திருமணம் நடந்ததாக வந்த தகவலில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளார் நடிகை அமலா பால். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து மணந்தார் அமலா பால். கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து விட்டனர். இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங் என்பவரை அமலா பால் காதலித்து வந்தார். சில நாட்களுக்கு முன் இருவரும் பஞ்சாபி முறைப்படி திருமணம் செய்யும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளிவந்தன. இந்த படங்களை பவிந்தர் சிங் வெளியிட்டு இருந்தார். பின்னர் அவரே நீக்கி விட்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.
 
இதுபற்றி பதில் சொல்லாமல் இருந்து வந்த அமலா பால், இப்போதுதான் வாய் திறந்துள்ளார். ‘எனக்கு திருமணம் செய்து வைத்து பார்ப்பதில் உங்களுக்கு என்ன அவசரம்? இப்போதுதான் சினிமாவில் புதிய உச்சிகளை தொட உள்ளேன். முதல் முறையாக இந்தியில் நடிக்க உள்ளேன். எனவே திருமணம் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. காதலை மறைக்காத நான், திருமணத்தை மட்டும் மறைப்பேனா?’ என்று அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Amlapal , Marriage, gossip, amlapal, anger
× RELATED நடிகை அமலாபால் கொடுத்த புகாரில் 2 பேர்...