×

கொரோனாவால் கைவிடப்படும் வளர்ப்பு பிராணிகளுக்கு நிதி திரட்டும் வரலட்சுமி

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உணவு பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் தாங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை பராமரிக்க முடியாமலும், உணவளிக்க முடியாமலும் கைவிட்டு வருகிறார்கள். இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவைகள் உணவு இன்றி தவித்து வருகிறது. அதேபோல சாலையில் திரியும் கால்நடைகளும் உணவின்றி தவித்து வருகிறது. இதை தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார், தான் வசிக்கும் பகுதியில் உள்ள தெரு நாய்கள், கால்நடைகளுக்கு உணவளித்து வருகிறார். அதோடு தனது ‘சேவ் சக்தி’ பவுண்டேசன் சார்பில் கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கவும், உணவு வழங்கவும் நிதி திரட்டி வருகிறார். இதற்காக பவுண்டேஷனின் வங்கி கணக்கு விவரத்தை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Tags : fundraiser ,Varalakshmi ,Corona ,Abandoned Pets , Corona, Pets, Varalakshmi
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்