×

நிவாரண உதவிகள் கோரி வீட்டுக்கு முன்பு நின்ற தொழிலாளர்களை கைது செய்வதா?: சிஐடியு கண்டனம்

சென்னை: சிஐடியு தலைவர் சவுந்தரராசன், பொதுச்செயலாளர் சுகுமாறன் வெளியிட்ட அறிக்கை: ஊரடங்கு மே 3ம் தேதி நீடிக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க உணவு பொருட்கள் வழங்க கோரியும், நிவாரண உதவிகள் வழங்க கோரியும் சிஐடியு சார்பில் நாடு முழுவதும 21ம் தேதியன்று தொழிலாளர்கள் தங்களது வீட்டு முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி 5 நிமிடம் நின்று அரசை வலியுறுத்த அறைகூவல் விடப்பட்டது.

அன்றைய தினம் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் சமூக விலகலை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட தொழிலாளர் மற்றும் குடும்பத்தினர் மீது தமிழக காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபடுவதும், வழக்கு பதிவதும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசை குறைசொல்வதற்காக நடத்தப்பட்ட இயக்கம் அல்ல இது, தங்களுடைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்துவது சட்டவிரோதமாக காவல்துறை பார்ப்பது ஏற்புடையதல்ல.


Tags : Arrest workers ,CITU ,home , Arrest workers, front , home demanding,CITU condemnation
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு