×

பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான்: பிட்ச் அறிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள கணிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0.8 சதவீதமாக மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளது. இருப்பினும், அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 6.7 சதவீதமாக வளர்ச்சி அடையலாம் என கூறியுள்ளது. கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நுகர்வோர் செலவு மற்றும் நிலையான முதலீடுகள் குறைந்துள்ளன.

உலக அளவில் பொருளாதார சரிவு கடந்த 2009ஐ விட இரட்டிப்பாக இருக்கும் என கூறியுள்ளது. இதுபோல், ஆக்ஸிஸ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் நடப்பு நிதியாண்டில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார மந்த நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது.


Tags : Economic growth ,fitch rating
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...