×

சில்லி பாயின்ட்...

* 2008ல் முதல் முதலாக ஐபிஎல் ஏலம் நடந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சயம் என்னை ஒப்பந்தம் செய்யும் என நம்பினேன். கேப்டனாக நியமிப்பார்களா? என்பதே எனது கேள்வியாக இருந்தது. ஆனால், சிஎஸ்கே மிகப் பெரிய தொகைக்கு டோனியை ஏலம் எடுத்தது. என்னை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். அது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அப்போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். டோனியும் அருகில் தான் இருந்தார். ஏலம் பற்றி என்னிடம் எதுவும் பேசவில்லை. ஒருவேளை அவருக்கே தெரிந்திருக்காது என நினைக்கிறேன். 13 ஆண்டுகள் ஓடிவிட்டது. இன்னும் சிஎஸ்கே எனக்கு அழைப்பு விடுக்கவில்லை… என்று விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
* ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை குறித்து ஜுலை மாதத்துக்கு முன்பாக எந்தவித முடிவுக்கும் வர முடியாது என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி டேவிட் ஒயிட் தெரிவித்துள்ளார்.
* டிரேப் பிரிவு துப்பாக்கிசுடுதல் வீரர் அங்குர் மிட்டல், ஊரடங்கு காலத்தில் தனது உடல்தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்காக உடற்பயிற்சியுடன் யோகாவும் செய்வதாகக் கூறியுள்ளார்.
* ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட நேர்ந்தாலும் அதற்கு தான் மன ரீதியாகத் தயாராகிவிட்டதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.

Tags : Chennai Super Kings ,Dinesh Karthik ,Dhoni , Chennai Super Kings, Dhoni, Dinesh Karthik
× RELATED ஐதராபாத்துக்கு எதிராக போராடி வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்