×

குடிமகன்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்; புதுகை, தஞ்சையில் தலைதூக்கும் கள்ளச்சாராயம் , சூதாட்டம்: கரன்சியை வாங்கி சுருட்டி கொண்டு போலீஸ் ‘கப்சிப்’

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் சூதாட்டம் ஜோராக நடக்கிறது. இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. கொரோனோ தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அன்று மாலை 6 மணி முதல் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. மது கிடைக்காததால் குடிமகன்கள் பிளாக்கில் கிடைக்கும் மதுபாட்டில்களை அதிக விலை கொடுத்து வாங்கி குடித்து வருகின்றனர். பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் ஒருபுறம் இருந்தாலும், எரி சாராயத்தால் மக்கள் ஒரு பக்கம் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 38 சட்ட ஒழுங்கு காவல் நிலையங்கள், 5 மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 43 காவல் நிலையங்கள் உள்ளது. 7 டிஎஸ்பி அலுவலங்கள் உள்ளன. இந்த போலீஸ் சரகங்களுக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் தலை தூக்கி வருகிறது. இதை தடுக்க மதுவிலக்கு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த 29 நாட்களில் இதுவரை 6400 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள பருத்திக்கோட்டை, தென்னமநாடு, ஆயங்குடி, திருமங்கலக்கோட்டை, ஆம்பலாபட்டு, வடசேரி, ஆழிவாய்க்கால்,

செல்லம்பட்டி, வடக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச துவங்கியுள்ளனர். ஒரு லிட்டர் எரிசாராயம் ரூ.2000 முதல் 2500 வரை விற்கப்படுகிறது. எரிசாராயம் விற்பவர்களிடம் ஒரத்தநாடு போலீசாரும் பட்டுக்கோட்டை கலால் போலீசாரும் சாராயத்தை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டு மாமுலையும் பெற்றுக்கொண்டு கள்ள சாராய வியாபாரிகளுக்கு உற்சாகம் தரும் வகையில் உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தொடர்ந்து ஒரத்தநாடு மற்றும் பாப்பாநாடு திருவோணம் பகுதிகளில் எரி சாராய விற்பனை அமோகமாக இருக்கும் வேளையில், பணம் வைத்து சூதாட்டமும் சூடுபிடித்துள்ளதாகவும், இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Celebration ,citizens ,Pudukkai ,Police Currency Buy ,Pranayama , Pudukkai, Thanjavur, head of counterfeiting, gambling
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...