×

கொரோனாவை போராடி வென்ற வியாட்நாம்: நாட்டில் 6 நாட்களாக புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை...நிம்மதியில் பொதுமக்கள்

ஹனோய்: 100 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட இறக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை 268 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி  கண்டறியப்பட்டது. தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  

கொரோனா பரவ தொடங்கியதும் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவருக்கும் முறையாக பரிசோதனை  நடத்தப்பட்டது. கொரோனா அறிகுறி இருந்தவர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பழைய ராணுவ முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐரோப்பியா நாடுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து வந்த 45,000-கும் மேற்பட்ட மக்களை தனிமைப்படுத்தினர். வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு முழுவதும் தடை விதித்து  உத்தரவிட்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதில் வேகமாக செயல்பட்டு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது எப்படி ,யாரையெல்லாம் சந்தித்தார்கள் என தெரிந்து கொண்டு அவர்களையும் தனிமைப்படுத்தினர். ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் வியட்நாம் வரையறுக்கப்பட்ட வசதிகள் மட்டுமே கொண்ட நாடு. வியட்நாமின் சீறிய முயற்சியால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300கூட தாண்டவில்லை. 97 மில்லியன் மக்கள் தொகை  கொண்ட நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. மேலும் கடந்த 6 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவை போல் மக்களை பரிசோதித்து முடிவுகளை உடனுக்கு உடன் முடிவுகளை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. வியட்நாமில் ஒற்றை கட்சி ஆட்சி நடப்பதால், அங்கு வலுவான கண்காணிப்பு உட்கட்டமைப்பு  உள்ளது. இதனால் கடுமையான, தீர்க்கமான நடவடிக்கைகளை எளிதாக செயல்படுத்த முடிந்தது. 2003ல் சீனாவில் சார்ஸ் வைரஸ் முதலில் பரவிய நாடு வியட்நாம் தான், அதற்கு அந்த நாடு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருந்தது.  அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது வேகமாக செயல்பட்டு உலகை உலுக்கும் கொரோனாவை எளிதாக வியட்நாம் கட்டுப்படுத்தியுள்ளது.

Tags : Vietnam ,Corona ,Veteran ,country nobody ,country , Corona, Vietnam, vulnerability, civilians
× RELATED திண்டுக்கல்லில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்