×

குடியாத்தம் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம்: வனத்துறையினர் விரட்டி அடித்தனர்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டி அடித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், குடியாத்தம் அடுத்த கொட்டாமிட்டா பகுதியில் 2 குட்டி யானைகள் உட்பட 7 யானைகள் திடீரென நேற்றுமுன்தினம் இரவு அங்குள்ள மாந்தோட்டத்தில் புகுந்தது. 25க்கும் மேற்பட்ட மாமரங்களின் கிளைகளை முறித்து அட்டகாசம் செய்தது.

மேலும், விவசாய நிலத்தில் இருந்த கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்த குடியாத்தம் வனத்துறையினர் வந்து பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் ஏற்றியும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்தனர். தொடர்ந்து யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் அவற்றை நிரந்தரமாக விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : settlement ,Forest Department ,Gudiyatham , Settlement, agricultural crops, elephants
× RELATED தேர்தல் பிரசாரத்தின் போது பாம்பை...