×

ஊரடங்கு மே 3ல் நிறைவு; போக்குவரத்துக்கு தயாராகும் அரசு பஸ்கள்: நெல்லை பணிமனையில் பணிகள் தீவிரம்

நெல்லை: நாடு தழுவிய ஊரடங்கு மே 3ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் நெல்லை பணி மனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை பராமரித்து, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு போக்குவரத்துக்குக்கு தயாராகி வருகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் 8 கோட்டங்கள் மூலம் பல்வேறு வழித்தடங்களில் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் நீண்ட தொலைவுக்கான பஸ்கள் விரைவு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படுகின்றன. இந்த வகையில் மொத்தம் 23 ஆயிரம் பஸ்கள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. ஊரடங்கையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் விரைவு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் அனைத்து பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மே 3ம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வருவதை முன்னிட்டு பணிமனைகளில் முடங்கிக் கிடக்கும் பஸ்களை ெதாழில்நுட்ப பணியாளர்கள், டிரைவர்கள் சுழற்சி முறையில் பராமரிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. மேலும் பஸ் இன்ஜின்களை இயக்கியும், டயர்களில் காற்று  சரியாக உள்ளதா என்பதை முறைப்படுத்த வேண்டும். பிரேக், வைபர், ஜன்னல் கதவுகள் முறையாக செயல்படுகிறதா என்பதையும் கவனித்து சரி செய்யப்பட்டது. பஸ் முழுவதும் தண்ணீர் வைத்து சுத்தம் செய்தல், பஸ்களின் பேட்டரிகள்  சீராக இயங்க வைத்தல், முகப்பு விளக்கு, டேஞ்சர் விளககு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்து பஸ்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தொடர் ந்து பணிமனை களில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி  தெளிக்கப்பட்டன. இதேபோல் தொழிலாளர்கள் ஓய்வு அறைகள், அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிககப்பட்டது. இதுகுறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பு ஊரடங்கு  மே 3ம் தேதி நிறைவடைவதால் பஸ்களை இயக்கும் நிலையில் நிலையில் வைத்திருக்க நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி பஸ்கள் அனைத்தும் போக்குவரத்துக்கு தயாராகி வருகின்றன” என்றனர்.

Tags : Government ,paddy workshop , Curfew, transport, government buses
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...