கொலம்பியாவில் கடுமையான ஊரடங்கு: அத்தியாவசியப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யும் ரோபோ

கொலம்பியா: கொலம்பியாவில் அத்தியாவசியப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய ரோபோ வாகனங்களை கடை உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட  205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 50 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 85 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. கொரோனா நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இதனால் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க கொலம்பியாவில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமலில் இருந்தாலும், அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுமக்கள் வெளியில் வர அஞ்சுவதால், அவர்களுக்கு தேவையான பொருட்கள் ரோபோ வாகனங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை செல்போன் மூலம் தெரிவிப்பதோடு, கூகுள் மேப் மூலம் இருப்பிடத்தையும் குறிப்பிட்டால், அந்த இடத்திற்கே இந்த ரோபோ வாகனங்கள் சென்று பொருட்களை வழங்குகின்றன. இது அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Related Stories:

>