×

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்: தொற்று நோய் பரவும் அபாயம்

கள்ளக்குறிச்சி: கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தியாகதுருகம் சாலை பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் வளாகத்தில் செயல்பட தொடங்கியது. விவசாயிகள், சிறு வியாபாரிகள் சமூக இடைவெளியுடன் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கடை வியாபாரிகள் அதிகரித்ததால் நெருக்கடியான இடத்தில் சமூக இடைவெளி இல்லாமல் ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான இடத்தில் உள்ள கடைகளில் பொதுமக்களும் பாதுகாப்பற்ற நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு காய்கறிகள் வாங்கி வருகின்றனர்.

மேலும் காய்கள் விற்பனை செய்கின்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக காய்கறி விற்பனை செய்கின்ற வியாபாரிகளின் கடைகளை சமூக இடைவெளியுடன் அமைப்பதோடு, பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளுடன் நின்று காய்கறிகள் வாங்க கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Tags : crowds ,tiller market ,Kallakurichi , Kallakurichi, tiller market, crowds
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...