×

சிஎஸ்கே அணியில் எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்ததும் இதயம் துடிப்பது நின்றது போல் இருந்தது: தினேஷ் கார்த்திக் பேட்டி

டெல்லி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியில் விளையாட தற்போதும் காத்திருப்பதாக கூறியள்ளார். ஐ.பி.எல் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கிய போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அவர்களது சொந்த மண்ணின் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்தனர். அதன்படி சச்சின் மும்பை அணிக்கும், கங்குலி கொல்கத்தா அணிக்கும், சேவாக் டெல்லி அணிக்கும், டிராவிட் பெங்களூரு அணிக்கும் தலைமையேற்று விளையாடினர்.

சென்னை அணிக்காக ராஞ்சியை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் cricbuzz-க்கு அளித்த பேட்டியில் “2008 ஐ.பி.எல் ஏலம் நடைபெறும் போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருந்த நான் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தேர்வு செய்வார்கள் என்று உறுதியாக இருந்தேன். எனக்கு இருந்த சந்தேகம் அணிக்கு நான் கேப்டனா? இல்லையா? என்பது தான். அது தான் எனது சிந்தனையில் இருந்த ஒன்று.

ஆனால் தோனியை அவர்கள் 1.5 மில்லியனுக்கு ஏலம் எடுக்கையில் அவர் என்னுடன் மூலையில் அமர்ந்திருந்தார். அவர்கள் அவரை தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை என்னிடம் கூட தோனி சொல்லவில்லை“ என்றார். மேலும் சி.எஸ்.கே எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல் இருந்தது என்று கூறிய அவர் தற்போதும் சி.எஸ்.கே அணியின் அழைப்புக்காக காத்திருப்பதாக கூறினார். ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்தி இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் லேஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் உள்ளிட்ட 6 அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

Tags : Dhoni ,Dinesh Karthik Interview ,CSK , CSK, Dhoni, Heart, Dinesh Karthik
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...