×

கொரோனா எதிரொலி: மத்திய அரசு ஊழியர்களுக்கான 2021 ஆம் ஆண்டு ஜுலை வரையிலான அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு

டெல்லி; மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 21,393 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 681 பேர் உயிரிழந்த நிலையில், 4257 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அடுத்த மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜுலை வரையிலான அகவிலைப்படி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 2020 மற்றும் ஜுலை 20 அகவிலைப்படி உயர்வு தொகை வழங்கப்படாது எனவும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 2021 ஜனவரியில் வழங்கப்பட வேண்டிய  அகவிலைப்படியும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது. கொரோனா தடுப்பு பணிக்காக அகவிலைப்படி நிறுத்திவைக்கபட்டுள்ளது. பழைய முறையில் 17% என்ற அளவிலேயே அகவிலைப்படி தொடரும் எனவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் ஏழை மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதியுதிவி திட்டத்தின் மூலம் மொத்தம் 33.14 கோடி பயனாளர்களுக்கு ரூ.31,235 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.16,146 கோடியும், கட்டிட பணியார்களுக்கு ரூ.3,497 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். விதைவைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூ.1,405 வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளது. 2021 ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2021 மார்ச் வரை மத்திய அரசுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : pay hike ,Corona Echo ,government ,Central Government Employees for Suspended Hike , Corona, Central Government, Employees
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...