×

புதிதாக திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகள், விவசாய நிலையங்கள்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், ஊரடங்கின் போது எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்று விதிகளை தளர்த்தி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நகர்புறங்களில் கீழ் கண்ட கடைகள் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பேக்கரி
* மாவு, தானிய வகைகள் அரைக்கும் அரவை மில்கள்
* பாடப் புத்தக விற்பனை கடைகள்
* மின் விசிறி விற்பனை கடைகள்
* முதியோர்களுக்கான உதவியாளர், பராமரிப்பாளரை அனுப்பும் சேவை அமைப்புகள்
* மொபைல் ப்ரீபெய்டு கடைகள்
* பிரெட் தயாரிப்பு நிறுவனங்கள்
* பால் உற்பத்தி நிலையங்கள்
* விவசாயம், தோட்டக்கலை ஆய்வு நிலையங்கள்
* மாநிலங்களுக்கு உள்ளேயே மரம் நடுதல்
* தேனீக்கள் வளர்த்தல்
* காடுகளில் விவசாயம் செய்தல், காடு வளர்த்தல் பணிகள்
இந்த தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அமைப்புகள் செயல்பட அனுமதி அளித்துள்ள போதிலும், அங்கு சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே, அத்தியாவசிய கடைகளான மளிகை கடைகள், காய்கறி கடைகள், சந்தைகள், உணவு கடைகள், ஓட்டல்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வர்த்தக கப்பல் ஊழியர்களுக்கு அனுமதி
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், ‘ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விதிகளின் அடிப்படையில் இந்திய வர்த்தக கப்பல்களில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் இந்திய துறைமுகங்களில் இறங்கவும், கப்பலில் ஏறவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த 28 நாட்களில் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர் என்பது குறித்த விவரங்களை கப்பல் நிறுவனங்களோ அல்லது ஏஜென்டுகளோ தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரிசோதனையில் நெகடிவ் என்ற முடிவு வரும் பட்சத்தில் மட்டுமே ஊழியர் கப்பலில் ஏற அனுமதிக்கப்படுவார். அதேபோல், கப்பலில் இருந்து விடுமுறைக்கு இறங்கும் ஊழியர் இருக்கும் கப்பலில் உள்ள அனைவரும் அப்பகுதியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் அல்லது துறைமுக அதிகாரிகளிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்,’ என்றும் கூறப்பட்டுள்ளது.



Tags : shops ,farms , Stores, Agricultural Stations, Corona
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி