×

ஹைட்ராக்சி குளோரோகுயினால் நோயாளிகள் இறப்பு அதிகரிப்பு: அமெரிக்காவில் அதிர்ச்சி

வாஷிங்டன்:இந்தியாவில் இருந்து 3 கோடி  ஹைட்ராக்சி குளோரோகுயின் எனப்படும் மலேரியா தடுப்பு மாத்திரையை, மிரட்டி அமெரிக்க அரசு இறக்குமதி செய்து இருப்பு வைத்துள்ளது. ஆனால், அதனால் பலனில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.  இந்நிலையில், நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,`ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை அசித்ரோமைசினுடன் சேர்த்து பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பு குறையும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை,’ என தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்சி குளோரோகுயினால் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து டிரம்ப் கூறும் போது, `‘இது பற்றி ஒன்றும் தெரியவில்லை, சில நல்ல அறிக்கைகளும் உள்ளன.  ஆனால், இது நல்ல தகவல் அல்ல, இது தொடர்பாக நாம் விரைவில் முடிவு எடுப்போம்,’’ என்றார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த்  நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மூலம்தான் மரண விகிதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், கொரோனா சிகிச்சைக்கான மாதிரிகள் தற்போது ஆய்வுகளில் உள்ளன, ஹைட்ராக்சி குளோரோகுயின் அல்லது குளோரோகுயினை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தலாமா என்பது பற்றிய மருத்துவ புள்ளி விவரங்கள் இல்லை’ என கூறப்பட்டுள்ளது.



Tags : United States , Hydroxy chloroquine, Patients, Increase in Mortality, USA
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!